இந்திய குடியரசு தினம்: ‘அட் ஹோம்’ வரவேற்பு நிகழ்ச்சியை நடத்திய ஜனாதிபதி!

இந்தியாவின் 77-ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு, ஜனாதிபதி திரௌபதி முர்மு ராஷ்ட்ரபதி பவனில் பாரம்பரியமான ‘At Home’ வரவேற்பு நிகழ்ச்சியை நேற்று நடத்தினார்.
இந்த சிறப்பு நிகழ்வில் ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் அன்டோனியோ கோஸ்டா, ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டர் லெயன் உள்ளிட்ட உயர்மட்ட சர்வதேச தலைவர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் இந்திய துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள், வெளிநாட்டு தூதர்கள், முக்கிய பிரமுகர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
நாடு முழுவதும் குடியரசு தின உற்சாகம் நிலவிய சூழலில், இந்த ‘At Home’ வரவேற்பு நிகழ்ச்சி இந்தியாவின் ஜனநாயக மரபையும், சர்வதேச நட்புறவையும் பிரதிபலிப்பதாக அமைந்தது.
உலக நாடுகளுடனான இந்தியாவின் உறவுகளை வலுப்படுத்தும் அடையாளமாக இந்த நிகழ்வு பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *