போதைப்பொருள் வைத்திருந்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

பதுளை பிரிவின் குற்றப் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் பதுளை நகரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பகஸ்தோவ பொலிஸாரால் நேற்று பிற்பகல் (26) மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது அவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்படும் போது சந்தேகநபரிடமிருந்து 4.2 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விநியோகிக்கும் நோக்கத்திற்காக அவர் போதைப்பொருளை வைத்திருந்தாரா என்பது குறித்து கண்டறிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட பெண் பொலிஸ் உத்தியோகத்தர் இன்று பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *