திரிபோஷா கிடைக்கவில்லை ; சுகாதார சேவை அதிகாரிகள் தெரிவிப்பு!

கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு அரசாங்கத்தால் இலவச திரிபோஷா, பல மாதங்களாக சில பிராந்திய சுகாதார அதிகாரி அலுவலகங்களுக்கு கிடைக்கவில்லை, என்று தெரிவிக்கப்படுகிறது.

தேவையை பூர்த்தி செய்யும் அளவு விநியோகத்தை வழங்க முடியாததால், பெரும் சிரமத்தை எதிர்கொள்வதாக குடும்ப சுகாதார சேவை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

​​திரிபோஷா உற்பத்திக்குத் தேவையான சோளம் போதுமான அளவு இல்லாததே இதற்குக் காரணம் என்று, இலங்கை திரிபோஷா நிறுவனத்தின் தலைவர் அமல் அத்தநாயக்க கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *