கிளிநொச்சியில் பல்வேறு பகுதிகளில் காபட் வீதிகள் பூரணமைப்பு!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் தற்பொழுது பல பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அதில் ஒரு அங்கமாக வீதி அபிவிருத்திப் பணிகள் கிளிநொச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் காபெட் வீதிகளாக புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கோரக்கண்கட்டு பகுதியில் பல வருட காலமாக வீதி புணரமைக்கப்படாது குன்றும் குழியுமாக மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் பாடசாலை மாணவர்கள், நோயாளர் காவு வண்டிகள் மற்றும் விவசாயிகள் என இவ்வீதி ஊடாக பயணிப்பதில் பல வருட காலமாக பல சிரமங்களை எதிர்நோக்கி வந்த நிலையில் வீதி புனமைப்பு தொடர்பாக  ஆர்ப்பாட்டங்களையும் முன்னெடுத்து இருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

குறித்த விடயம் தொடர்பாக தேசிய மக்கள் சக்தியின் வீதிகள் மற்றும் நெடுஞ்சாலைகள் போக்குவரத்து அமைச்சர் விமல் ரத்னாக்கவின் தலையீட்டின் ஊடாக  இவ்வீதி புணரமைப்புப் பணிகள் தற்பொழுது துரித கருதியில் முன்னெடுக்கப்பட்டு நிறைவடைந்த நிலையில் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

இவ்விதியானது 1.5 கிலோமீற்றர் தூரம்வரை காபெட் வீதியாக புனரமைக்கப்பட்டுள்ளது.

இதற்காக 45 மில்லியன் ரூபாய் செலவு விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.

குறித்த வீதியினை விரைவாக புனரமைப்புப் பணிகளை நிறைவு செய்துதந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினருக்கும் மற்றும் சம்பந்தப்பட்ட உரிய அதிகாரிகளுக்கும் இப்பகுதியில் வாழும் மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

அது மட்டுமன்றி குறித்த வீதியை புனரமைத்துத் தந்தது போன்று எமது பகுதியில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்துவதற்கான பல்வேறு உதவி நலத்திட்டங்களையும் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *