போதைக்கு அடிமையான மகனை வெட்டிக் கொன்ற தந்தை!

பொலன்னறுவை மெதிரிகிரியை பிரதேசத்தில் போதைப் பொருள் பயன்பாட்டிற்கு அடிமையான தனது 24 வயது மகனை தந்தையானவர் வெட்டிக்கொன்றுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது .

உயிரிழந்த இளைஞர் நீண்ட காலமாக போதைப் பொருள் பழக்கத்திற்கு அடிமையாக இருந்தவர் என்றும் இதனால் வீட்டில் அடிக்கடி சச்சரவுகள் மற்றும் குழம்பங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அந்த முரண்பாடுகள் இறுதியில் இந்த கொலைச் சம்பவமாக மாறி உள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய 48 வயதுடைய தந்தை கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *