பொதுவாக நாம் அனைவரும் அவசரத்திற்காக ஒருசில மருந்துகளை எப்போதும் வீட்டில் வைத்திருப்போம். அதுவும் வீட்டில் குழந்தைகள் இருந்தால், நிச்சயம் ஒருசில மருந்துகளை ஸ்டாக் வைத்திருப்போம். குறிப்பாக காய்ச்சல், சளி, மூக்கடைப்பு போன்ற சிறு சிறு பிரச்சனைகளுக்கு மருத்துவர்கள் எப்போதும் பரிந்துரைக்கும் மருந்துகளை வாங்கி வைத்து, தேவைப்படும் போது பயன்படுத்துவோம்.
குறிப்பாக குளிர்காலம், பனிக்காலத்தில் வீட்டில் குழந்தைகள் இருந்தால் அடிக்கடி சளி, இருமல், வயிற்றுப்போக்கு, மூக்கடைப்பு, காய்ச்சலால் சிரமப்படுவார்கள். அப்படியான சூழ்நிலையில் வீட்டிலேயே மருந்துகளை வைத்திருந்தால், அவற்றை கொடுத்து, நிலைமை மோசமாவதைத் தடுக்கலாம் அல்லவா!
கட்டாயம் இருக்கும் ஒரு மருந்து தான் பாராசிட்டமல். ஆனால் இந்த மருந்தை தவிர, வேறு சில மருந்துகளையும் வீட்டில் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள் வைத்திருக்க வேண்டும். இதுக்குறித்து இஎஸ் குழந்தை பராமரிப்பு மையத்தின் குழந்தைநல மருத்துவர் டாக்டர் பிரதீப் அவர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஒவ்வொரு பெற்றோரும் வீட்டில் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய 6 மருந்துகள் குறித்தும், அவற்றை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும் விரிவாக விளக்கியுள்ளார்.

