ஈரானில் அண்மையில் வெடித்த ஆர்ப்பாட்டங்களில் 3,117 பேர் மாண்டதாக ஈரானிய அரசாங்கத் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
ஆர்ப்பாட்டங்களில் மாண்டோர் எண்ணிக்கை குறித்த முதல் அதிகாரபூர்வ அறிவிப்பாக இது விளங்குகின்றது.
மாண்டவர்களில் குறைந்தது 2,400 பேர் பொதுமக்களும் பாதுகாப்புப் படையினரும் என்று கூறப்பட்டுள்ளது.
மற்றவர்கள் குறித்த விவரங்கள் இதுவரையும் வெளியிடப்படவில்லை.
எனினும் அமெரிக்காவைத் தளமாக கொண்டுள்ள மனித உரிமை அமைப்பு ஆர்ப்பாட்டங்களில் மாண்டோர் எண்ணிக்கை குறைந்தது 4,560 என்கிறது.
கடந்த ஆண்டு (2025) டிசம்பர் 28ஆம் திகதி ஆர்ப்பாட்டங்கள் தொடங்கின என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே ஈரானின் வெளியுறவு அமைச்சர் முதன்முறையாக அமெரிக்காவிற்கு நேரடி மிரட்டல் விடுத்திருப்பதுபோல் தெரிகிறது.

