வந்தாறுமூலை சிவமுத்து மாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேக நிகழ்வு

நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமையான மட்டக்களப்பு வந்தாறுமூலை ஸ்ரீ சிவமுத்து மாரியம்மன் ஆலயத்தினுடைய மகா கும்பாபிஷேக நிகழ்வானது நேற்று(16) இடம்பெற்றது.

வந்தாறுமூலை ஸ்ரீ சிவமுத்து மாரியம்மன் ஆலய புனராவர்த்தன அஷ்ட பந்தன ஏக குண்ட பக்ஷ மஹா கும்பாபிஷேக நிகழ்வானது கடந்த 13 ஆம் திகதி கிரியைகள் உடன் ஆரம்பமாகி 14 ஆம் திகதி காலை 8மணி தொடக்கம் – 15ஆம் திகதி பி.ப. 2மணி வரை எண்ணெய்க்காப்பு நடைபெற்றது.

அத்துடன் நேற்று காலை 6:30 மணி முதல் 7:23 மணி வரையுள்ள மிதுன லக்கின சுப வேளையில் மகா கும்பாபிஷேகம் இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து மகாகபிர் நிவேதனம் தேவர்கள் வழிபாட்டிற்கு திருக்கதவம் காப்பிடல் யாக உத்வாசனம் எஜமான் அபிஷேகம் கற்பாபரண அபிஷேகம் திருமுறை ஓதி திருக்கதவும் திறத்தல் தசமங்கல தரிசனம் மகா அபிஷேகம் விசேட பூஜை பிரதம குரு ஆசியுரையும் பிரசாதம் வழங்கல் அன்னதானமும் வழங்கப்படுவதோடு நேற்றைய தினப்பூஜை நிகழ்வுகள் நிறைவுபெற்றது.

இன்று(17) தொடக்கம் 26ஆம் திகதி வரை மாலை 5.00 மணியிலிருந்து இரவு 8.00 மணிவரை மண்டலாபிஷேகம் பூசைகள் நடைபெறும். 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அபிஷேகங்களில் சிறப்பானதாகக் கொள்ளப்படும் 1008 சங்காபிஷேகம் இடம்பெற்று வந்தாறுமூலை ஸ்ரீ சிவமுத்து மாரியம்மனுக்கான மகா கும்பாபிஷேக நிகழ்வானது நிறைவு பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *