தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு  

மட்டக்களப்பில் செய்யப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

 

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் மாவட்ட செயலகம் இணைநது தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் திருமதி ஜஸ்டினா முரளிதரனால் புதிய மாவட்ட செயலகத்தில் இன்று(16) வழங்கி வைக்கப்பட்டன.

 

குறித்த நிகழ்வு மாவட்ட செயலாளர் ஜீ. பிரணவன் மேற்பார்வையில் மாவட்ட சிறுவர் பாதுகாப்பு இணைப்பாளர் எம்.ஆர். நிஷா ஏற்பாட்டில் இடம் பெற்றது.

 

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் நாடளவிய ீ தியில்  பாடசாலை இடை விலகளை குறைப்பதற்கு பல்வேறு வேலைத்திட்டங்கள் மேற்கொண்டு வருகின்றது.

 

இதன் போது கருத்து தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் பெறுமதியான கற்றல் உபகரணங்களை பெறும் மாணவர்களே போழுதுபோக்கில் நாட்டத்தை செலுத்தாது கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டு சிறந்த புள்ளிகளை பெற வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுரை கூறினார்.

 

இந் நிகழ்வில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் மாவட்ட உளசமூக உத்தியோகத்தர் ஏ.பிரபாகரன், தேசிய சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஏ.ஜே. சியாம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

இந் நிகழ்விற்கான அனுசரணையை புகழிடம் , சைனிங் ஸ்டார் மற்றும் ஏ யு லங்கா நிறுவனம் வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *