மட்டக்களப்பு – புன்னைச்சோலை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வு

மட்டக்களப்பு – புன்னைச்சோலை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வு இன்று(06) காலை 05.45 மணிக்கு விஷேட பூஜை வழிபாடுகளுடன் ஆரம்பமாகியது.

ஆலய மகா கும்பாபிசேக நிகழ்வுகள், கடந்த புதன்கிழமை, ஆலய பிரதம குரு, மனோகரன் குருக்கள் தலைமையில்

ஆரம்பமாகியது.

விசேட யாக பூசைகள் இடம்பெற்ற நிலையில், இன்றைய தினம் எண்ணெய் காப்பு சாற்றப்பட்டது.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு எண்ணெய்க்காப்பு சாத்தினர்.

மகா கும்பாபிஷேகம், வருகின்ற ஞாயிற்று கிழமை 8 ஆம் திகதி இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *