வழக்குகளிலிருந்து தமிழரசுக் கட்சியை விடுவிக்கக் கோரி உணவு தவிர்ப்பு போராட்டம்

ஈழத்தமிழர்களின் தேசிய அரசியல் இயக்கமான இலங்கைத் தமிழரசுக் கட்சியை வழக்குகளிலிருந்து விடுவிக்கக் கோரும் அடையாள உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று(05) இடம்பெற்றது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியை வழக்குகளிலிருந்து விடுவிக்கக் கோரும் ஜனநாயக போராட்டமானது இன்று யாழ் செல்வா நினைவுத் தூபி முன்பாக இடம்பெற்றது.

குறித்த போராட்டமானது முன்னாள் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் சண்முகராஜா ஜீவராஜாவால் முன்னெடுக்கப்பட்டது.

இப் போராட்டமானது காலை 8.00 மணி தொடக்கம் 2.00 மணியளவில் வரை உணவு தவிர்ந்த போராட்டமாக நடாத்தப்பட்டிருந்தது.

இதில் பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *