வெல்லாவெளி கலைமகள் மகா வித்தியாலயத்தில் உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் 04.06.2025 இல் அதிபர் அ.ஜெயப்பிரதாபன் தலைமையில் நடைபெற்றது.
இவ் விழிப்புணர்வு ஊர்வலம் பாடசாலை வளாகத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு வெல்லாவெளி பிரதேச செயலகம் வரை சென்றது. இந் நிகழ்வில் போரதீவுப்பற்று பிரதேச செயலக சுற்றுச் சூழல் பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர் எம்.சதீஸ்கரன், வெல்லாவெளி பொதுச் சுகாதாரப் பணிமனை பொதுச் சுகாதார உத்தியோகஸ்த்தர் கு.குபேரன் ஆகியோர் கலந்துகொண்டு இச் செயற்பாட்டினை சிறப்பிக்க ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலர் சுற்றாடல் பாதுகாப்பு சம்பந்தமான பதாதைகளுடன் கலந்து இச் செயற்பாட்டினை நடைமுறைப்படுத்தியுள்ளனர்


