விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து வருகிறது.
குறித்த சீரியலின் நாளைய நாளுக்கான பிரமோ வெளியாகியுள்ளது.
குறித்த சீரியலில் முதன்மையான பாத்திரமாக திகழ்பவர் தான் பாண்டியன்.
இவரது மனைவியின் பெயர் கோமதி. இவருக்கு மொத்தம் ஐந்து பிள்ளைகள். மூன்று ஆண் பிள்ளைகளும் இரண்டு பெண் பிள்ளைகளும் இருப்பதாக காட்டப்படுகிறது.
பாண்டியனின் 2ஆவது மருமகள் தங்கமயில் பட்டப்படிப்பு முடித்திருப்பதாக பொய் கூறி ஏமாற்றி வருகிறார். டிகிரி முடித்து அவர் நல்ல கம்பெனியில் வேலை செய்வதாக எல்லோரும் நம்புகின்றனர்.
ஆனால், தங்கமயில் ஒரு ஹோட்டலில் டேபிள் துடைக்கும் வேலையை செய்து வருகிறார். தான் டிகிரி முடிக்கவில்லை என்கிற உண்மையை மறைக்க அவர் இப்படி செய்துகொண்டிருந்தார்.
ஆனால், தற்போது வெளியாகியிருக்கும் புதிய புரோமோவில் தங்கமயில் வேலை செய்யும் ஹோட்டலுக்கு சரவணன் எதார்த்தமாக சாப்பிட செல்கிறார்.
அப்போது அவருக்கு உணவு பரிமாறும் தங்கமயிலை பார்த்ததும் அதிர்ச்சியில உறைந்து போன சரவணன் கோபத்தில் எரிக்கும் பார்வையால் தங்கமயிலை பார்க்கிறான்.
ஆனால், மயில் கண்ணீர் வடித்துக் கொண்டு சொல்ல வழியேதும் இன்றி தவிக்கிறாள்.
பின்னர், கோபத்துடன் வெளியே சென்ற சரவணன் தங்கமயிலை இதுதான் நீ வேலை பாக்குற இடமா. அப்போ எதுக்கு என்னை அங்கே இறக்கி விட சொன்ன. என்னங்க நான் சொல்றத கேளுங்க என்று வருவதற்குள் பொய் சொல்லாத என்று கோபத்துடன் சரவணன் அந்த இடத்தை விட்டு செல்கிறான்.
வசமாக மாட்டிக்கொண்ட தங்கமயில் அடுத்து என்ன செய்ய போகிறார் என்ற பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பாண்டியன் இதற்கு என்ன முடிவெடுப்பார். தங்கமயில் சொல்லும் அடுத்த பொய்யும் முடிவுக்கு வந்து விட்டது.
சரவணன் தங்கமயிலை காப்பாற்றுவாரா அல்லது தந்தையிடம் சொல்வாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
புரோமோவை பார்த்த ரசிகர்கள் அது ஒன்றும் நடக்காது. புரோமோ மட்டும் தான் சரவெடியாக இருக்கும். பாண்டியன் வீட்டில் அது எல்லாமே புஷ்வானம் தான். தங்கமயிலு சரவணன விட்டு போக வாய்ப்பில்லை.
இயக்குநர் புதிதாக போர் அடிக்காமல் இருக்க ட்ரை பண்ணுவதாக ரசிகர்கள் ரோஸ்ட் செய்ய தொடங்கிவிட்டனர். அரசி காதல் விசயத்தையே சப்புன்னு தான் போயிட்டு இருக்கு. இதுல இது வேறயா பொறுத்திருந்து பார்ப்போம் என்று கலாய்க்கின்றனர்.
ஒரு பக்கம் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை கலாய்த்தாலும் ஒரு சில ரசிகர்கள் இதனை ரசித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


