தென்னிந்திய சினிமாவில் பிரபலமாகி இன்று உலகளவில் ரசிகர்களை கவர்ந்து வருபவர் சமந்தா.
மயோசிடிஸ் நோய் பாதிப்பில் இருந்துள்ள மீண்டுள்ள இவர் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
இந்தியில் ஒரு வெப் தொடரிலும், தெலுங்கில் பெண்களை மையப்படுத்தி உருவாகும் படத்திலும் நடித்து வருகிறார்.
பிரபல நிறுவனத்துக்கு நடிகை சமந்தா அளித்திருக்கும் பேட்டியில், “நான் 20 வயதில் இந்தத் துறையில் நுழைந்தேன்.
அப்போது என்னுடைய எண்ணமெல்லாம், எத்தனை பிராண்டுகள் நம்மை அணுகி, நம் முகத்தை அவர்களின் பிராண்டுக்காக தேர்வு செய்கிறார்கள் என்பதில்தான் நம் வெற்றி அடங்கியிருக்கிறது என நினைத்தேன்.
பெரிய பன்னாட்டு பிராண்டுகள் அனைத்தும் என்னை தங்கள் பிராண்ட் தூதராக விரும்பியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.
ஆனால், இப்போது நான் தவறான பொருள்களை தேர்வு செய்து, தவறான உதாரணமாக முடியாது.
ஆம், அந்த சிறு வயது முட்டாள்தானமாக செயல்பட்ட சமாந்தாவிடம் இந்த சமந்தா மன்னிப்புக் கேட்க வேண்டும்.
என் தேர்வுகள் குறித்து நான் சுயபரிசோதனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.
எனக்கு சரியானது எனத் தோன்றுவதைதான் பின்பற்ற வேண்டும்.
அதனால், இப்போது நான் ஒப்புக்கொள்ளும் ஒவ்வொரு பிராண்ட் குறித்தும் மருத்துவ ஆலோசனைகளை மேற்கொள்கிறேன்.
அதில் மருத்துவர்கள் கொடுக்கும் அறிவுரையின் அடிப்படையில் ஒப்புக்கொள்கிறேன்.
இளம் வயதிலிருந்து என்னைப் பின்பற்றுபவர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
வெற்றி என்பது எப்படியும் நம்மை வந்து சேரும். அதற்காக தவறான முன்னுதாரணங்களை அமைத்துவிடக் கூடாது.
கடந்த வருடம் நான் கிட்டத்தட்ட 15 பிராண்டுகளை வேண்டாம் என்று சொல்லி விட்டுவிட்டேன்.
அதனால் கோடிக்கணக்கானப் பணத்தை இழந்துவிட்டேன். அதனால் எனக்கு எந்த வருத்தமுமில்லை.
ஏனெனில் மற்றவர்களின் வாழ்க்கையில் நேர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தும் முடிவுகளை எடுக்கவே விரும்புகிறேன்” என்றார்.

