ஷிரான் பாசிக் விவகாரம்: சட்டமா அதிபருக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்!

தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரபல போதைப்பொருள் கடத்தல் சந்தேகநபரான ஷிரான் பாசிக்கிற்கு, வீட்டிலிருந்து உணவு பெற்றுக்கொள்ளவும் சட்டத்தரணிகளைச் சந்திக்கவும் தற்போதைய நிலையை விட கூடுதல் அனுமதி வழங்க முடியுமா என்பது குறித்து ஆராய்ந்து நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (05) சட்டமா அதிபருக்கு அறிவித்துள்ளது.

ஷிரான் பாசிக்கைத் தடுத்து வைத்திருப்பதைச் சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது அவர் பொலிஸ் மத்திய குற்ற விசாரணைப் பணியகத்தின் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *