எரிபொருள் விலை உயர்வு – மக்களுக்கு நிவாரணம்!

எரிபொருள் விலை உயர்வால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதற்கும், அஸ்வெசும நலத்திட்டப் பயனாளர்களுக்கு மேலதிக நிதி உதவிகளை வழங்குவதற்கும் ரூ.47 பில்லியன் பெறுமதியான மேலதிக நிதி மதிப்பீடு இன்று (04) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, எரிபொருள் விலை உயர்வால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கும்போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த மேலதிக நிதி மதிப்பீட்டின் ஊடாக, அஸ்வெசும நலத்திட்டத்தின் பயனாளர்களுக்கு மேலதிக நிதி உதவிகளை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு நிவாரணத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாக பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *