பட்ஜட் என்ற பாதீட்டு உரை என்பது வெறுமனே, வரவு செலவு கணக்கு அல்ல. அது அடுத்துவரும் உங்கள் அரசின் மூன்றாம் ஆண்டுக்கான கொள்கை உரையாகும். இதுவே சம்பிரதாயம் என்பது, நீண்ட பாராளுமன்ற அனுபவம்கொண்ட உங்களுக்கும் தெரியும். எனக்கும் தெரியும்.
ஆகவே, தோழர், ஜனாதிபதி, நிதி அமைச்சர் ஆகிய உங்களிடம், நீங்கள் எமது மக்களுக்கு அளித்த சில குறைந்தபட்ச உறுதி மொழிகளை முன் வைக்கிறேன்.
இரண்டு வருடங்கள் காத்திருந்த எங்களுக்கு, அடுத்த வருடமாவது இவை தொடர்பான நடைமுறை தீர்வுகள் கிடைக்கும் என்ற அறிவித்தல்களை. உங்கள் கொள்கை உரையில் தெரிவிப்பீர்கள் என நான் நம்புகிறேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்.பி.பாராளுமன்றததில் ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளார்.
தனது உரையை அடிப்படையாக கொண்ட கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளதாக கூறிய மனோ எம்.பி., அக்கடிதத்தையும் சபையில் ஹன்சாட் பதிவுக்கு சமர்ப்பித்தார்.

