2026ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டுக்காக மின்சாரக் கட்டணத்தை 2.88% உயர்த்துமாறு தேசிய மின் கட்டமைப்பு இயக்குநர் நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.
எனினும், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) 1.46% மின்சாரக் கட்டணத் திருத்தத்தைப் பரிந்துரைத்துள்ளது.
இது தொடர்பான இறுதி முடிவு நாளை நடைபெறவுள்ள பொதுமக்கள் கருத்தறியும் அமர்வின் பின்னர் அறிவிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

