நெற்செய்கைக்கு மேலதிகமாக 12 உணவுப் பயிர்களுக்கு மானியம் வழங்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக விவசாயப் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கங்கள் வழங்காத அதிகமான தொகையை தற்போதைய அரசாங்கம் விவசாயிகளுக்கான பயிர்ச்செய்கை மானியமாக வழங்கும் நடவடிக்கைகளை ஏற்கனவே நடைமுறைப்படுத்தி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் கருத்துத் தெரிவித்த அவர,
விவசாயிகளுக்கு வழங்கப்படுவது ஒரு பயிர்ச்செய்கை மானியமாகும்.
இந்த நிதியை உரம் வாங்குவதற்கோ சேதங்களை ஈடுசெய்வதற்கோ அல்லது நிலத்தைப் பண்படுத்துவதற்கோ என தமது எந்தவொரு தேவைக்கும் விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
நாங்கள் ஆட்சியைக் பொறுப்பேற்ற போது வழங்கப்பட்ட மானியத் தொகையை தற்போது இருமடங்காக உயர்த்தியுள்ளோம்.
நெல்லுடன் சேர்த்து மொத்தம் 13 பயிர்களுக்கு இந்த மானியம் வழங்கப்படுகிறது.

