நாட்டின் பல பகுதிகளில் இன்று (02) பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ , மத்திய, தென், ஊவா , கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் குருநாகல் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும். குறித்த பகுதிகளில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகரித்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் மழையில்லாத வானிலையே நிலவுமென திணைக்களம் தெரிவித்துள்ளது.

