கடலில் மாயமான மீனவர்கள் – தேடல் முயற்சியில் கடற்படையினர்!

குடாவெல்ல மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த 21 ஆம் திகதி, மீன்பிடி நடவடிக்கைகளுக்காகக் கடலுக்குச் சென்று இதுவரை கரை திரும்பாத நான்கு (04) மீனவர்களை தேடும் நோக்கில் இலங்கை கடற்படையினரால் ஆரம்பிக்கப்பட்ட தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் இன்றைய தினமும் (01) தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை, கடந்த 26ஆம் திகதி சலைப் பிரதேசத்திலிருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காகக் கடலுக்குச் சென்று இதுவரை கரை திரும்பாத மூன்று (03) மீனவர்களையும் தொடர்ச்சியாக தேடுவதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய, தெற்கு, வடக்கு மற்றும் கிழக்கு கடற்படை கட்டளைகளின் கீழ் இணைக்கப்பட்டுள்ள கடற்படைக் கப்பல்கள் மற்றும் படகுகள் இத்தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், குறித்த கடற்பரப்புகளை உள்ளடக்கும் வகையில் தொடர்ந்தும் இந்நடவடிக்கைகள் இடைவிடாது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *