பட்டிப்பளையில் சமுர்த்தி அபிமானி விற்பனை சந்தையும், உள்ளூர் உற்பத்திப் பொருட்களுக்கான பிரதேச மட்ட விற்பனைக் கண்காட்சி நிகழ்வும் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் எஸ். ராஜ்பாபு தலைமையில் கொக்கட்டிச்சோலை பொதுச் சந்தையில் நேற்று(11) நடைபெற்றது.
பட்டிப்பளையில் சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் பிரதேச செயலக சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவினரின் ஏற்பாட்டில் உள்ளூர் சுய தொழில் உற்பத்தி முயற்ச்சியாளர்களின் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வதற்கான சந்தை வாய்ப்பை கொக்கட்டிச்சோலை பொதுச் சந்தையில் விற்பனை செய்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியிருந்தனர்.
தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளுக்கு சந்தை வாய்ப்பைப் பெற்றுக் கொடுப்பதுடன், நுகர்வோர்களிடம் இருந்து வருகின்ற கேள்விகள் மற்றும் விற்பனை வாய்ப்புகளை சலுகை விலையில் மக்கள் கொள்வனவு செய்வதற்கான களமாக இக் கண்காட்சி அமைந்தது.
இப்பிரதேச செயலகப் பிரிவில் உற்பத்தி செய்யப்படும் பெறுமதிசேர் பொருட்களை பெருந்திரளான மக்கள் ஆர்வத்துடன் கொள்வனவு செய்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் பட்டிப்ளை உதவி பிரதேச செயலாளர் திருமதி. மேனகா புவிக்குமார், சமுர்த்தி திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் வங்கி அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


