ஆசிய பரா விளையாட்டில் 200 மீற்றரில் தனஞ்சனாவுக்கு வெள்ளிப் பதக்கம்!

அய்ச்சி நகோயா 2026 ஆசிய பரா விளையாட்டு விழாவின் இரண்டாம் நாளான இன்று இலங்கைக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது.

ரி47 வகைப்பிரிவு பெண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையின் மாற்றுத்திறனாளி ஜனனி தனஞ்சனா விக்ரமசிங்க வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார்.

அப் போட்டியை 25.80 செக்கன்களில் ஓடி முடித்தே அவர் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இந்த நிகழ்ச்சியில் அவர் பதிவுசெய்த அவரது தனிப்பட்ட சிறந்த நேரப் பெறுதி இதுவாகும்.
இப் போட்டியை 25.23 செக்கன்களில் நிறைவு செய்த தாய்லாந்தின் மாற்றுத்திறனாளி சசிரவன் இன்தாசோட் ஆசிய பரா விளையாட்டு விழா போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

இந்தோனேசியாவின் மாற்றுத்திறனாளி நந்தா சோலிஹா (25.93 செக்.) வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *