மட்டக்களப்பில் இளைஞர் தலைமைத்துவப் பயிற்சி வேலைத்திட்டம் ஆரம்பம்

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஊடாக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கும் இவ் வேலைத்திட்டம்  மட்டக்களப்பில் ஆரம்பமானது.

இரண்டு கட்டங்களாக முன்னெடுக்கப் படவுள்ள இப் பயிற்சி வேலைத்திட்டத்தின் ஊடாக இளைஞர்களிடையே தலைமைத்துவ பண்பினையும் சகோதரத்துவத்தினையும் மேம்படுத்தும் வகையிலும் 2027 ம் வருடத்தில் இளைஞர் கழக புனருத்தாபன செயற்பாடுகளுக்கு புத்துயிர் அளிக்கும் வகையிலும் இளைஞர் யுவதிகளை தயார்படுத்தி இளைஞர் கழக செயற்பாடுகளை வினைத்திறனுடன் முன்னெடுக்கும் வகையிலும் இவ் வேலைத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கோறளைப்பற்று பிரதேசத்தில் அமைந்துள்ள டெல்மா நிறுவனத்தின் MJF பயிற்சி நிலையத்தில் இன்று தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர்  நிசாந்தி அருள்மொழி தலைமையில் ஆரம்பமான இந் நிகழ்வில் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் ராஜ்பாபு தேசிய இளைஞர் சேவைகள் மன்ற கிழக்கு மாகாணப்பணிப்பாளர் ஆலிதீன் ஹமீர் இளைஞர் விவகார அமைச்சின் மாவட்ட இணைப்பாளர் திலீப்குமார் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி சசிகுமார் மாவட்ட தகவல் நிலைய உத்தியோகத்தர் றம்சி மாவட்ட நிஸ்கோ முகாமையாளர் அருளானந்தம் ஓட்டமாவடி இளைஞர் பயிற்சி நிலைய பொறுப்பதிகாரி ஹனீபா MJF பயிற்சி நிலைய முகாமையாளர் இளைஞர் சேவை அதிகாரிகள் மாவட்ட பிரதேச இளைஞர் கழக சம்மேளன அங்கத்தவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *