இந்த மன அழுத்தத்திலிருந்து வெளி வருவதற்காக வைத்தியர்களை நாடுதல் மற்றும் மாத்திரைகள் எடுத்துக்கொள்ளுதல் என அதிகளவில் பணத்தையும் நாம் செலவழிக்கின்றோம்.
மன சோர்வை போக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தொடர்ந்து தொலைபேசி, கணணி, தொலைக்காட்சி, மடிக்கணணி என டிஜிட்டல் ஸ்கிரீன்களை பார்ப்பதை குறைத்து கொண்டு கண்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.
உங்கள் மனதை ரிலாக்ஸாக வைத்து கொள்வதுடன் ஒருநாள் குறிப்பிட்ட நேரம் வரை டிஜிட்டல் டிவைஸ்களை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்இந்த டிஜிட்டல் டீடாக்ஸை தினசரி பின்பற்றுவது மன அழுத்தத்தை குறைக்க மற்றும் ஒட்டுமொத்த அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது.
நீங்கள் பின்பற்ற கூடிய தினசரி வழக்கத்தில் Mindfulness தியானத்தை சேர்த்து கொள்ளுங்கள.
தினசரி சில நிமிடங்கள் உங்கள் சுவாசத்தில் கவனம் செலுத்துங்கள் அத்தோடு உங்கள் மனதில் இருக்கும் குழப்பங்களை நீக்குங்கள்.
இந்த எளிய மற்றும் சக்திவாய்ந்த பயிற்சி மன அமைதியை ஊக்குவிக்கிறது அத்தோடு செறிவை அதிகரிக்க செய்கிறது மற்றும் மனநிலையை பேலன்ஸாக வைத்து கொள்வதற்கு பங்களிக்கிறது
பூங்காவில் அல்லது மலை பகுதிகளில் நடைபயிற்சி செல்வது மற்றும் சூரிய உதயம் அல்லது அஸ்தமனத்தை இரசிப்பது என எதுவாக இருந்தாலும் இயற்கை சூழலில் நீங்கள் செலவிடும் நேரம் உங்களது மன அழுத்தத்தை குறைத்து உற்சாகம் மற்றும் புத்துணர்ச்சியாக இருக்க பெரிதும் உதவும்.
தினசரி போதுமான அளவு நன்றாகவும் மற்றும் நிம்மதியாகவும் தூங்குவதற்கு எப்போதுமே முக்கியத்துவம் கொடுங்கள்.
இரவு ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தூங்க செல்வது, அதே போல காலை குறிப்பிட்ட நேரத்திற்கு எழுவது என்ற வழக்கத்தை பின்பற்றுங்கள்.
நீங்கள் தூங்கும் அறை நிம்மதியாக தூங்க கூடிய சூழலில் இருப்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.
அறிவாற்றல் செயல்பாடு, நினைவக ஒருங்கிணைப்பு மற்றும் உணர்ச்சி ஆரோக்கியம் என பல விஷயங்கள் நன்றாக இருக்க தினசரி தூக்கம் தரமாதாக இருப்பது அவசியம்.

