சட்டவிரோத சூதாட்ட விடுதியில் போலீஸ் அதிரடி – 10 பேர் பிடிப்பு

பண்டாரவளை வர்த்தகத் தொகுதி வளாகத்தில் இயங்கி வந்த சட்டவிரோத சூதாட்ட விடுதி மீது பொலிஸார் திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர். இந்த நடவடிக்கையில் அங்கு இருந்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பண்டாரவளை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவிற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இன்று (23) காலை மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த சூதாட்ட நிலையம் முற்றுகையிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கைதுசெய்யப்பட்டவர்கள் பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். இதேவேளை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரவளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *