1990ஆம் ஆண்டில் அதிக நச்சுத்தன்மை கொண்ட பூச்சிக்கொல்லிகளுக்கு விதிக்கப்பட்ட தடையினால் இலங்கையில் உயிர்மாய்ப்பு மரணங்கள் சுமார் 70% குறைந்துள்ளதாக சுகாதார அமைச்சர் டாக்டர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்ற 79ஆவது உலக சுகாதார மாநாட்டில் உரையாற்றிய அவர், அனைத்து நாடுகளும் தங்களின் உயிர்மாய்ப்பு தடுப்பு திட்டங்களில் பூச்சிக்கொல்லி கட்டுப்பாட்டை இணைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
1995இல் ஒரு இலட்சத்திற்கு 47 ஆக இருந்த உயிர்மாய்ப்பு விகிதம், 2022ஆம் ஆண்டில் 14 ஆக குறைந்துள்ளதாகவும், நச்சுப் பூச்சிக்கொல்லி தடையே இதற்கான முக்கிய காரணம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

