100 மில்லிமீற்றரை எட்டிய கனமழை

நாட்டில் தென்மேற்குப் பருவமழை நிலைமை படிப்படியாக வலுப்பெற்று வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. குறிப்பாக சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரையிலான பலத்த மழை பதிவாகலாம்.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பல பகுதிகளில் மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மின்னல் மற்றும் கடும் காற்றால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *