30 ஆண்டுகால கொடூர பயங்கரவாத யுத்தத்தின் துயரத்தை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டை மீட்டெடுத்த முப்படை வீரர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது ஆழ்ந்த நன்றியும் மரியாதையும் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பாதுகாப்பு, ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் ஆள்புல ஒருமைப்பாட்டிற்காக தமது உயிரையும் உடல் உறுப்புகளையும் தியாகம் செய்த வீரர்களின் அர்ப்பணிப்பை என்றும் நினைவுகூர வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
பத்தரமுல்லை பாராளுமன்ற வளாகத்திற்கு அருகிலுள்ள படைவீரர் நினைவுத் தூபியில் இன்று (20) நடைபெற்ற நினைவு நிகழ்வில் கலந்துகொண்ட அவர், மலரஞ்சலி செலுத்தி தனது மரியாதையைப் பதிவு செய்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் உட்பட பலரும் நிகழ்வில் பங்கேற்றனர். யுத்தம் மற்றும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிலையான தீர்வுகள் வழங்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
மீண்டும் இத்தகைய சூழல் உருவாகாத வகையில் நல்லிணக்கம் மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.
நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை பாதுகாப்பது அனைவரின் பொறுப்பு எனவும் அவர் குறிப்பிட்டார்.

