நடிகர் ரவி மோகன் தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தன்னைப் பற்றிய விமர்சனங்களை நிறுத்த வேண்டும் என்றும், விவாகரத்து முடியும் வரை நடிக்கப் போவதில்லை என்றும் தெரிவித்தார். குழந்தைகளை பார்க்க முடியாத நிலை இருப்பதாகவும் கூறினார்.
இதையடுத்து, தற்போது ரவி மோகன் ஆன்மிகப் பயணத்தில் ஈடுபட்டு, சபரிமலை ஐயப்பனுக்காக மாலை அணிந்து விரதத்தை தொடங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

