ஜப்பானின் ககோஷிமா மாகாணத்தின் தெற்குத் தீவுகளில் இன்று புதன்கிழமை ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலநடுக்கத்திற்குப் பின் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்றும், சுனாமி அபாயம் இல்லை என்பதை ஜப்பான் வானிலை ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதேவேளை, இந்த நிலநடுக்கத்தால் இதுவரை உயிர்ச்சேதம் அல்லது சொத்துச் சேதம் எதுவும் பதிவாகவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

