பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் டீசல் வாகனங்களில் சுமார் 50 சதவீதமானவை அதிக அளவில் கரும்புகையை வெளியேற்றுவதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டில் இதுவரை சுமார் 1,000 வாகனங்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ள நிலையில், 12 மாவட்டங்களில் விசேட பரிசோதனைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதிக அளவில் கரும்புகை வெளியேற்றும் வாகனங்களுக்கு 14 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படுவதுடன், அந்த வாகனங்கள் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

