முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வீட்டிற்கு குற்றப் புலனாய்பு திணைக்களத்தின் அதிகாரிகள் இன்று காலை 9.30 அளவில் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரணில் விக்ரமசிங்கவின் மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் ஒன்றை பெறுவதற்காகவே அவர்கள் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி அவரிடம் தற்போது வாக்குமூலம் பெறப்படுகிறது.

