சுகாதார அமைச்சின் முன்னாள் அதிகாரிக்கு விளக்கமறியல்!

சுகாதார அமைச்சின் ஓய்வுபெற்ற முன்னாள் தலைமை சட்ட அதிகாரி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்ட அதிகாரியாக பணியாற்றிய காலத்தில் சுகாதார அமைச்சுக்காக கட்டிடம் ஒன்றை குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொடுத்தபோது இலஞ்சம் கோரியமை மற்றும் பெற்றுக்கொண்டமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (21) பிற்பகல் 3.45 மணியளவில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு, மேலதிக நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து மே மாதம் 05ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *