இன்று இலங்கையில் சர்வதேச அமைதி நடைப்பயணம் ஆரம்பம்!

அரச அனுசரணையுடன் முன்னெடுக்கப்படும் சர்வதேச அமைதி நடைப்பயணம் இன்று (21) ஆரம்பமாகவுள்ளது.

இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக புத்தசாசன அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நடைப்பயணத்தில் பங்கேற்பதற்காக, ‘அமைதியின் செல்லப்பிராணி’ என்று உலகளாவிய ரீதியாக அறியப்படும் ‘அலோகா’ என்ற நாய், இன்று காலை நாட்டை வந்தடைந்தது.

உலகெங்கிலும் பலரது கவனத்தை ஈர்த்துள்ள இந்தச் செல்லப்பிராணியின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் நலன்புரிச் சேவைகளுக்காக விசேட திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

பன்னாகர தேரர் தலைமையிலான பிக்குகள் குழுவினர் இந்த அமைதி நடைப்பயணத்தை முன்னெடுக்கவுள்ளனர்.

அநுராதபுரம் ஜய ஸ்ரீ மகா போதியில் உள்ள அரச மரக் கன்று ஒன்றை ஏந்தியவாறு இந்த நடைப்பயணம் அமையவுள்ளது.

அநுராதபுரம் ஜய ஸ்ரீ மகா போதியில் உள்ள அரச மரக் கன்று, மாலை 3 மணிக்கு அமைதி நடைப்பயணத்தில் பங்கேற்கும் பிக்குகளிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படும்.

பின்னர் ருவன்வெலிசாய வளாகத்தில் மாலை 4 மணிக்கு விசேட மத வழிபாட்டு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *