3 நாட்களில் மாமன் படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

மாமன்

நடிகர் சூரியின் யதார்த்தமான நடிப்பில் உருவாகி கடந்த வாரம் திரைக்கு வந்த படம் மாமன். இப்படத்தை இயக்குநர் பிரஷாந்த் பாண்டியராஜ் இயக்கியிருந்தார்.

இதற்கு முன் இவர் இயக்கத்தில் விலங்கு எனும் வெப் சீரிஸ் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றிபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

இப்படத்தில் சூரியுடன் இணைந்து ஐஸ்வர்யா லட்சுமி, ஸ்வாசிகா, ராஜ்கிரண், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். எமோஷனலான திரைக்கதை, மனதை தொடும் பாச காட்சிகள் என படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

வசூல் 

மூன்று நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் மாமன் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படம் உலகளவில் 3 நாட்களில் மட்டுமே ரூ. 9.5 கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படத்திற்கான வசூல் எப்படி இருக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *