கொக்கட்டிச்சோலையில் மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்பு!

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பகுதியில் தனது விவசாய நிலத்திற்கு நீர் பாய்ச்சுவதற்காக மின் மோட்டாரை இயக்க முற்பட்ட நபர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

இந்தச் சோகமான சம்பவம் நேற்று (11) இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொக்கட்டிச்சோலை, தாந்தாமலை பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் தனது பயிர்ச்செய்கைக்கு நீர் பாய்ச்சுவதற்காக மின் பிறப்பாக்கியை பொருத்த முயற்சித்துள்ளார்.

இதன்போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு அல்லது மின் கசிவு காரணமாக அவர் பாரியளவில் மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் உடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து கொக்கட்டிச்சோலை காவல்துறை நிலைய அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *