மஹாபொல கொடுப்பனவு தொடர்பில் வெளியான அறிவிப்பு!

மஹாபொல உயர்கல்வி புலமைப்பரிசில் நிதியத்தினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் மார்ச் மாதத்திற்கான மஹாபொல புலமைப்பரிசில் தவணைக்கட்டணம் இன்று (10) வங்கி கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளது.

இதன்படி, மார்ச் மாதத்திற்குரிய 10,000 ரூபாய் மாதாந்த தவணைக்கட்டணம் மாணவர்களின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

லலித் அத்துலத்முதலி மஹாபொல உயர்கல்வி புலமைப்பரிசில் நிதியத்தின் ஊடாக புலமைப்பரிசில் வழங்கும் நடைமுறையைத் திறம்படச் செய்ய முடிந்ததால், மார்ச் மாதத்திற்குரிய தவணைக்கட்டணத்தைப் புலமைப்பரிசில் பெறும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு உரிய திகதிக்கு முன்னதாகவே வழங்க முடிந்ததாக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் விஜித் மலல்கொட தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *