சிலாபம்-தெதுரு ஓயா பகுதியில் பாரியளவிலான கஞ்சா மற்றும் பணத்துடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிலாபப் பிரிவு போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய, நேற்று வியாழக்கிழமை (09) மதியம் தெதுரு ஓயா பகுதியில் விசேட சுற்றிவளைப்பு ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, 10 கிலோகிராம் 787 கிராம் கஞ்சா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. அத்துடன், போதைப்பொருள் வியாபாரம் மூலம் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 128,000 ரூபாய் பணமும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த சம்பலம் தொடர்பாக சிலாபம், சிங்கபுர பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ஆண் ஒருவரும் 26 வயதுடைய பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் சிலாபம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளில் சிலாபம் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

