ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஒருநாள் சேவை இன்று முதல் ஆரம்பம்!

ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த சேவைகளில், அத்தியாவசியத் தேவைகளைக் கொண்ட விண்ணப்பதாரர்களுக்கான ஒருநாள் சேவை இன்று புதன்கிழமை (08) முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசியத் தேவைக்காக தேசிய அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டியவர்களுக்கு மாத்திரம் பத்தரமுல்ல பிரதான அலுவலகம் மற்றும் மாகாண அலுவலகங்களில் ஒருநாள் சேவை முன்னெடுக்கப்படும் என ஆட்பதிவுத் திணைக்களத்தின் பதில் ஆணையாளர் நாயகம் எம்.எஸ்.பி. சூரியப்பெரும தெரிவித்துள்ளார்.

திணைக்களத்தின் கணினி கட்டமைப்பை முழுமையாகச் சீர்செய்யும் பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.

பிரதான மற்றும் மாகாண அலுவலகங்களின் சாதாரண சேவைகள் மற்றும் முன்கள் அலுவலகச் சேவைகள் மீண்டும் அறிவிக்கும் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

கணினி அமைப்பு முழுமையாகக் சீர்செய்யப்பட்ட பின்னர், அனைத்து சேவைகளும் வழமை போல் தடையின்றி முன்னெடுக்கப்படும் என திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *