கொழும்பு புறநகர் பகுதிகளில் நீர்வெட்டு!

நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால், துணை நீர்த்தேக்கங்களிலிருந்து இயக்கப்படும் லபுகம மற்றும் கலதுவாவ நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் மட்டும் உற்பத்தி கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அந்த நீர் சுத்திகரிப்பு நிலையங்களால் ஊடாக நீர் வழங்கப்படும் பின்வரும் இடங்களுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் நேரம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி பெலன்வத்தை, சித்தமுல்ல, அரேவ்வல, நிவந்திடிய, போகுந்தர வீதி, இரத்மல்தெனிய, மஹரகம பிலியந்தல வீதி, மொரகெட்டிய வீதி, ஹிரிபிட்டிய, கொரகபிடிய வீதி, நியந்தகல வீதி, தோலேகடே சந்தி, குடமடுவ 255 பேருந்து வழித்தடத்திலிருந்து புபுது மாவத்தை 255 பேருந்து வழித்தடம் வரையான பகுதிகளில் அமைந்துள்ள பிரதேசங்களில் இன்று செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி முதல் நாளை (08), புதன்கிழமை காலை 8 மணி வரை நீர் விநியோகம் நிறுத்தப்படும்.

மேலும் கலகெதர, ஞாயிறு சந்தை, பின்னவல, வெவெல்பனாவ, பைகும்பே, மீபே, மாவத்தகம, பாதுக்க, உடுமுல்ல, அருக்வத்த, வெரகல, போபே, மலகல, கஹவல, மில்லவ, கொட்டிகம்கொட, பொரேகெதர, அங்கம்பிட்டிய, அங்கம்மன, மீரியகல்ல பிரதேசங்களில் நாளை (08), புதன்கிழமை அன்று காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நீர் விநியோகம் நிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *