விவசாயிகளுக்கு உர மானியம் ரூ.30,000 ஆக உயர்வு!

விவசாயிகளுக்கான விசேட நிவாரணத் திட்டத்தின் கீழ், நெற்பயிர் மற்றும் ஏனைய பயிர்களுக்கான உர மானியத்தை கணிசமாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (07) நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று விசேட உரையாற்றிய போதே அவர் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
அதன்படி, நெல்லுக்கான உர மானியம் 25,000 ரூபாயிலிருந்து 30,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், ஏனைய பயிர்ச்செய்கைகளில் ஈடுபடும் விவசாயிகளுக்கான மானியம் 15,000 ரூபாயிலிருந்து 18,000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பழைய விலையில் கொள்வனவு செய்யப்பட்ட பெருமளவிலான யூரியா உரக் கையிருப்பு உள்ளதாகவும், இதன் மூலம் விவசாயிகளுக்கு எவ்விதத் தடையுமின்றி உரங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *