25000 ரூபாயாக அதிகரித்த அஸ்வெசும கொடுப்பனவு!

இலங்கையில் தொடரும் மத்திய கிழக்கு மோதலின் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு, அரசாங்கம் ஒரு புதிய நிவாரணத் தொகுப்பை இன்று அறிவித்தது.

அதன் அடிப்படையில் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும கொடுப்பனவு 25,000 ருபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் சற்றுமுன்னர் தெரிவித்துள்ளார்.

இது ஏற்கெனவே மிகவும் வறிய பயனாளர்களுக்கு 17500 ரூபாயாக வழங்கப்பட்டு வந்தது.

குறித்த இக்கொடுப்பனவு இந்த மாதம் அதாவது ஏப்ரல் மாதத்திற்கு மாத்திரம் அதிகரிக்கப்பட்டுள்து என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *