அதிக விலைக்கு குடிநீர் விற்ற உணவகம் முற்றுகை!

நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரை விற்பனை செய்த கண்டியிலுள்ள உணவகம் ஒன்று நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

1977 என்ற நுகர்வோர் அவசர அழைப்பு இலக்கத்திற்கு கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய, கண்டி மாவட்ட விசாரணை அதிகாரிகளால் இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

விலைக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறியமைக்காக குறித்த உணவகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதேபோன்ற விலைக் குறைபாடுகள் அல்லது விதிமீறல்கள் இடம்பெறும் பட்சத்தில், 1977 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு முறைப்பாடுகளை செய்யுமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *