சீயோன் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு ஆராதனை!

மட்டக்களப்பில் சீயோன் தேவாலயத்தில் பலத்த பாதுக்கப்புக்கு மத்தியில் இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பை நினைவு கூரும் உயிர்த்த ஞாயிறு விசேட ஆராதனை இன்று(05) இடம்பெற்றது

கடந்த 2019 ஏப்ரல் 21 ம் திகதி உயிர்த்த ஞாயிற்றுக்கிழமை சீயோன் தேவாலயத்தில் ஜ.எஸ்.ஜ.எஸ். பயங்கரவாத ஸாரான்காசிம் குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுதாக்குதலில் 30 பேர் உயிரிழந்ததுடன் 80 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த தற்கொலை குண்டுதாக்குதல் இடம்பெற்று 6 வருடம் முடிந்தும் நீதி கிடைக்காத நிலையில் இன்று உயிர்த்த ஞாயிறு விசேட ஆராதனை இராணுவம் மற்றும் பொலிஸாரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தேவாலய போதகர் மகேசன் ரொசான் தலைமையில் இடம்பெற்றது. இதில் ஆயிர்கணக்கானோர் கலந்து கொண்டு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

இதேவேளை மாவட்டத்திலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் இந்த விசேட ஆராதனையை முன்னிட்டு பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் விமானப்படையினர் ஆலயங்களின் முன்னால் பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *