காசல்ரீ நீர்த்தேக்க அணைக்கட்டின் அருகில் தீ விபத்து!

தேசிய மின்சார உற்பத்திக்கு முக்கியமாக நீர் வழங்கும், காசல்ரீ நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டுக்கு கீழே அமைந்துள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் நேற்று சனிக்கிழமை மாலை பாரிய தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

காசல்ரீ நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டுக்கு கீழே அமைந்துள்ள சுற்றுலா விடுதிக்குக் கீழே உள்ள பகுதிக்கு, யாரோ தீ வைத்திருக்கலாம் என்று நீர்த்தேக்க மீனவர்கள் கூறுகின்றனர்.

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால், எரிந்து கொண்டிருக்கும் தீவிற்கு எளிதாக பயணிக்க முடிகிறது.
எனவே, தீவைப் பார்க்கச் சென்ற யாரோ தீ வைத்திருக்கலாம் என்று மீனவர்கள் கூறுகின்றனர்.

காசல்ரீ நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டுப் பகுதிக்கு சொந்தமான இடத்தில் ஏராளமான பறவைகள் கூடு கட்டியிருப்பதாகவும், எனினும் வேகமாக பரவி வரும் தீயைக் கட்டுப்படுத்த யாரும் முன்வரவில்லை, என்றும் காசல்ரீ நீர்த்தேக்கத்தின் மீனவர்கள் கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *