அமெரிக்க போர் விமானம் மீண்டும் குறிவைத்து வீழ்த்திய ஈரான்!

ஈரானிய பாதுகாப்புப் படையினர் அமெரிக்காவின் A-10 ரக விமானம் ஒன்றின் மீதும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி அதனை சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

ஹோர்முஸ் நீரிணைக்கு அருகிலுள்ள வான்பரப்பில் வைத்து இந்த விமானம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதுடன், தாக்குதல் நடத்தப்பட்டவுடன் அதன் விமானி வான்குடை மூலம் வெளியேறி உயிர் தப்பியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஈரானினால் நேற்று வெள்ளிக்கிழமை சுட்டு வீழ்த்தப்பட்ட F-15 போர் விமானத்தின் விமானியைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த விமானமே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *