குவைத்தில் மின்சாரம் மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது ஈரான் தாக்குதல் !

குவைத் நாட்டின் மின்சாரம் மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக குவைத் தெரிவித்துள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை (3) அதிகாலை நடத்தப்பட்டதாக கூறப்படும் இந்தத் தாக்குதலில் கட்டடத்தின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளதாக குவைத் மின்சாரம், நீர் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.

நிலைமையை சமாளிக்கவும் செயற்பாடுகளை தொடரவும் அவசரகால குழுக்கள் உடனடியாக பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கட்டடத்தின் ஆபத்தான பகுதியை பாதுகாப்பாக வைத்திருக்க பாதுகாப்பு அமைப்புகளுடன் இணைந்து செயற்பட்டு வருகிறோம் என அமைச்சின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

குவைத் நேரப்படி, இன்று காலை அந்நாட்டில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட பின்னரே இந்த மின்சாரம் மற்றும் நீர் சுத்திகரிப்பு நிலையம் தாக்கப்பட்டிருப்பதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *