திருகோணமலை – ஈச்சிலம்பற்று பகுதியில் ஆயுதங்கள் மீட்பு!

திருகோணமலை மாவட்டம் ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள பூமரத்தடிச்சேனை பகுதியிலுள்ள வாய்க்கால் ஒன்றிலிருந்து  வியாழக்கிழமை (02) ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

வாகரை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த இடத்தில் தேடுதல் மேற்கொள்ளப்பட்டபோது இப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதன்போது மோட்டார் குண்டுகள் 04, மோட்டார் குண்டு சாஜ்ஜர் -02 , ரீ- 56 ரக துப்பாக்கித் தோட்டாக்கள் 75 மீட்கப்பட்டுள்ளதோடு, இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈச்சிலம்பற்று பொலிஸார்  ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *