பங்களாதேஷ் சிறையிலிருந்து 06 இலங்கை மீனவர்கள் விடுவிப்பு!

பங்களாதேஷ் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, கடந்த ஆறு மாதங்களாக அந்நாட்டின் பொலிஸ் காவலில் இருந்த ஆறு இலங்கை மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

விடுதலை செய்யப்பட்ட ஆறு மீனவர்களும் நாளை (ஏப் 2) காலை இலங்கையை வந்தடைய உள்ளனர் என கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

இவர்கள் கடந்த 2025 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் திகதி ‘சுது துவா 4’ என்ற பல நாள் மீன்பிடி படகில் கடலுக்குச் சென்றிருந்தனர்.

கடல் எல்லைகளை மீறிய குற்றச்சாட்டில் பங்களாதேஷ் கடற்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டு, சிட்டகாங் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

இலங்கை கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சு, வெளிவிவகார அமைச்சு மற்றும் பங்களாதேஷிலுள்ள இலங்கை தூதரகம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த இராஜதந்திர முயற்சிகளின் பலனாகவே இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *